பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்புக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தல் 

விடுதலைப் போராட்ட வீரர் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்புக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தியுள்ளது.

Update: 2024-05-25 16:20 GMT
மாநிலத் தலைவர் நூர் முகம்மது பேசுகிறார்

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின், மாநிலக் குழு கூட்டம், தஞ்சாவூர் ஆற்றுப் பாலம் சரோஜ் நினைவகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு, அமைப்பின் மாநிலத் தலைவரும்,

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான  எஸ்.நூர்முகமது தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் அறிக்கை முன்வைத்துப் பேசினார்.  இதில், மாநிலப் பொருளாளர்   ஒய்.இஸ்மாயில், துணைத் தலைவர்கள் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் க.பீமாராவ், அகமது உசேன், அருட்பணி மரிய வின்சென்ட், மாரிமுத்து, மாநிலச் செயலாளர்கள்  வ.கல்யாண சுந்தரம்,  பி.செந்தில்குமார், 

கே.அலாவுதீன், எம்.தாமஸ் சேவியர், இஸ்ரத் அலி மற்றும் மாநிலக் குழு நிர்வாகிகள், தஞ்சாவூர் மாவட்டச் செயலர் என்.குருசாமி, மாவட்டத் தலைவர் பி.எம்.காதர் உசேன், பொருளாளர் அப்துல் நசீர், மாவட்ட நிர்வாகிகள் கோஸ்கனி, சேக் அலாவுதீன், எஸ்.ஜகுபர்அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில்,  "விடுதலைப் போராட்ட வீரர் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்புக்கு மதுரையில் மணிமண்டபம் அமைத்து, வருடம் தோறும் அவரது பிறந்த நாள், நினைவு நாளை அரசு சார்பில் கொண்டாட வேண்டும். சிறுபான்மை மக்களுக்கான நல உதவிகள் முறையாக வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ள சிறுபான்மை மக்களுக்கு குடிமனைப் பட்டா உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியும்" தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News