வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி: மோதலில் விவசாயி மண்டை உடைப்பு

வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் வாளால் தாக்கி விவசாயி மண்டை உடைக்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-05-30 10:08 GMT
சிகிச்சை பெறும் விவசாயி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அம்மன்பட்டி கிராமத்தில் நேற்று காளியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.‌ கடந்த வாரம் நடைபெற இருந்த இந்த வடமாடு மஞ்சுவிரட்டு கனமழையால் ரத்து செய்யப்பட்டது.

ரத்து செய்யப்பட்ட போட்டிகள் இன்று மீண்டும் நடைபெற்றது. ஏற்கனவே காளியம்மன் கோவில் பொங்கல் விழாவில் நாடகம் நடந்தபோது அடிதடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.‌ அதனைத் தொடர்ந்து வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட கூடும் என ஊர் மக்கள் பலர் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும் மஞ்சுவிரட்டு போட்டிக்கு அதிகாரிகள் அனுமதி வழங்கினர். அதிகாரிகள் அனுமதி வழங்கியதை தொடர்ந்து இன்று வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. அப்போது அம்மன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகியான விவசாயி உக்கிரபாண்டி(50) என்பவரை அதே ஊரைச் சேர்ந்த சிலர் வாளால் தாக்கி மண்டையை உடைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் அங்கு வருவதைப் பார்த்து வாளால் தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

மேலும் உக்கிரபாண்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்து விக்கிரபாண்டி அளித்த பேட்டியில், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கூறினோம். அதையும் மீறி அனுமதி வழங்கப்பட்டது.‌ இதைப் பயன்படுத்தி ஏற்கனவே அரசியல் முன்விரோதம் காரணமாக அம்மன்பட்டியைச் சேர்ந்த சிலர் வாளால் என்னை தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Tags:    

Similar News