பொங்கல் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு!

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் அருகே கீழப்பனையூர் தெற்கு குடியிருப்பில் புனித அந்தோனியார் ஆலய பொங்கல் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்று வருகிறது.

Update: 2024-01-19 08:43 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் அருகே கீழப்பனையூர் தெற்கு குடியிருப்பில் புனித அந்தோனியார் ஆலய பொங்கல் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்று வருகிறது.இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 13 காளைகள் பங்கேற்றுள்ளன.9 வீரர்கள் அடங்கிய 13 குழுவினர் பங்கேற்றுள்ளனர். ஏராளமான பொதுமக்கள் போட்டியை கண்டு ரசித்து வருகின்றனர் புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் அருகே கீழப்பனையூர் தெற்கு குடியிருப்பில் புனித அந்தோணியார் ஆலய பொங்கல் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு ஒநடைபெற்றது. இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் திருச்சி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம்,ஆகிய மாவட்டங்களிலுருந்து 13-காளைகளும் 99 - மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இதில் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.போட்டியில் மாடுகளும்,மாடு பிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியை காண அரிமழம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து போட்டியை கண்டு ரசித்தனர்.
Tags:    

Similar News