வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா திங்கள்நகரில் நடைபெற்றது.
By : King 24x7 Angel
Update: 2024-03-01 05:26 GMT
கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திங்கள்நகரில் நடைபெற்றது. பகுத்தறிவாளர்கழக மாவட் டத் தலைவர் சிவதாணு தலைமை தாங்கி உரையாற்றினார். தலைவர் மா.மு.சுப்பிரமணியம் முன்னிலை வகித்து உரையாற்றினார், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் துவக்கவுரையாற்றினார், திராவிடர் கழக மாநில துணைப் பொதுச்செயலாளர் சே. மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார், அவர் தமது உரையில் - பெரியாருடைய தொண்டுகள், வைக்கம் போராட்ட வரலாறுகள், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சமூகநீதி தொண்டுகள் குறித்தும், ஒன்றிய பா.ஜ.க அரசு மக்களுக்கு செய்யும் துரோகங்களையும் பேசி மக்களை துன்புறுத்தி வரும் பா.ஜ.க தோற்கடிக்கப்பட வேண்டும் என கூறினார். திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.