வைகாசி அமாவாசை : பூக்கள் விலை உயர்வு.

பரமத்தி வேலூர் தினசரி பூ ஏல மார்கெட்டில் நாளை வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வடைந்துள்ளது.

Update: 2024-06-05 08:49 GMT

மல்லிகை (பைல் படம்)

பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளான பாலப்பட்டி,குப்புச்சிபாளையம்,அண்ணாநகர்,குஞ்சாம்பாளையம்,ஆனங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வகையான பூக்களை விவசாயில் பயிர் செய்துள்ளர். அங்கு விளையும் பூக்களை பரமத்தி வேலூர் பஸ் நிலையம் அருகே உள்ள பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர்.  கொண்டுவந்த பூக்களை பரமத்தி வேலூல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பூ வியாபாரிகள் வந்து ஏலம் கூறி  வாங்கி செல்வது வழக்கம்.

இன்று நடைபெற்ற பூக்கள் ஏலத்தில் கிலோ ஒன்று மல்லிகை பூ 320-க்கும்,சம்பங்கி பூ 80-க்கும்,அரளி பூ- 120-க்கும்,ரோஸ் பூ 200-க்கும்,செவ்வந்தி பூ 300-க்கும், கனகாம்பரம் பூ 600-க்கும்,முல்லை பூ 300-க்கும்,பன்னீர் ரோஸ் 100-க்கும் ஏலம் போனது. நாளை வைகாசி மாதம் அமாவாசையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர் .

Tags:    

Similar News