நாட்டரசன் கோட்டையில் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

Update: 2024-05-14 14:57 GMT

நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.


சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டையில் சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சியாக நடைபெறும். பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி பெருந் திரு விழாவினை முன்னிட்டு இன்று காலை கோயில் கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் கொடியினை ஏற்றினர். முன்னதாக உற்சவர் கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் உட் பிரகாரத்தில் பல்லக்கில் மேளதாளங்கள் முழங்க அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து கொடிக்கம்பத்திற்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர் மாலைகள், தற்பை புற்களை பொருட்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனை கட்டப்பட்டது. இதனை நாட்டரசன்கோட்டை, கண்டுபட்டி, சிவகங்கை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான புத்தர்கள் கலந்து கொண்டா சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News