புகழிமலையில் வைகாசி கிருத்திகை சிறப்பு பூஜை

புகழிமலையில் வைகாசி கிருத்திகை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2024-06-06 13:59 GMT

புகழிமலையில் வைகாசி கிருத்திகை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமானோர் பங்கேற்பு. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, வேலாயுதம்பாளையம் அருகே உள்ள புகழி மலையில் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி அமர்ந்து அருள் பாளித்து வருகிறார். நேற்றைய தினம் வைகாசி மாத கிருத்திகை முன்னிட்டு மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. சிறப்பு பூஜையில், சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரத்தில் காட்சியளித்த மூலவர் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பிறகு, மகா தீபாதாரணை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு முருகன் அருளை பெற்று சென்றனர்.

Tags:    

Similar News