வைகாசி விசாகம்; சிறப்பு வழிபாடு
வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஊட்டியிலுள்ள எல்க்ஹில் முருகன் கோவிலில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;
Update: 2024-05-22 12:24 GMT
வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஊட்டியிலுள்ள எல்க்ஹில் முருகன் கோவிலில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
காலை 8:45 மணிக்கு அபிஷேகம் அலங்கார பூஜையை தொடர்ந்து மதியம் மயில் வாகனத்தில் முருகன் திருவீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஜெகநாதன், ஆய்வாளர் ஹேமலதா, தக்கார் லோகநாதன் ஆகியோர் செய்திருந்தனர்