வைகாசி விசாகப் பெருந்திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
நத்தம் கைலாசநாதர் கோயில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
Update: 2024-05-07 13:30 GMT
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்பிகா சமேத கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் மேற்குப் பார்த்த சிவாலயம் என்ற சிறப்பு பெற்ற பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயிலின் வைகாசி விசாகப் பெருந்திருவிழா வருகின்ற சித்திரை 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருப்பதை தொடர்ந்து 10 நாள் திருவிழா அதிவிமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று கோயிலில் முகூர்த்தக் கால் ஊன்றும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. கொண்டையம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் விழாக்கமிட்டியார்கள், இந்து சமய அறநிலையத்துறையைச் சேர்ந்த கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.