சாம்பவா்வடகரை ஸ்ரீ ராமசாமி கோயிலில் வைகாசித் திருவிழா

ஸ்ரீ ராமசாமி கோயிலில் வைகாசித் திருவிழா நடைபெற்றது.

Update: 2024-05-23 06:34 GMT

வைகாசித் திருவிழா

தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரை ஸ்ரீ ராமசாமி கோயில் வைகாசித் திருவிழாவில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. ஆண்டுதோறும் 11 நாள்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் இத்திருவிழா நிகழாண்டு மே 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் இரவு 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜையும், இரவு 9 மணிக்கு ராம சரிதம் தொடா் வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்வாக 8ஆம் திருநாளான திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு வெள்ளைக் குதிரையில் சுவாமி பரிவெட்டைக்கு செல்லும் நிகழ்வும், 9ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை சுவாமி திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றன. சிகர நிகழ்ச்சியாக 10ஆம் திருநாளான புதன்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி, மாலை 3 மணிக்கு சிறப்பு பூஜைகளுக்குப் பின், அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளியதும் தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை சாம்பவா்வடகரை இந்து நாடாா் மகமை கமிட்டி நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.
Tags:    

Similar News