ஜமீன் ஊத்துக்குளியில் பிரம்மாண்ட வள்ளி கும்மியாட்டம்

பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியில் வள்ளியை முருகன் கரம் பிடித்த புராணக் கதையை பொதுமக்களிடையே எடுத்துரைத்து நடைபெற்ற பிரம்மாண்ட வள்ளி கும்மியாட்டத்தில் 500.க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-06-19 08:29 GMT

காராள வம்ச கலைச்சங்கத்தின் சார்பில் கொங்கு மண்டலம் முழுவதும் பவளக்கொடி வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்றம் மூலம் பாரம்பரிய புராணக் கதைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன்றனர்.. இதன் ஒரு பகுதியாக 50.வது பொன்விழா அரங்கேற்றம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி பகுதியில் மைதானத்தில் நடைபெற்றது..  சுமார் ஒரு மாதம் பயிற்சி பெற்ற இளைஞர்கள் இளம் பெண்கள் இல்லத்தரசிகள் என 500.க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்துகொண்டு வள்ளி பிறந்து வளர்ந்து சுப்ரமணியசுவாமியை கரம் பிடித்த புராண கதையை வள்ளி கும்மி மூலம் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், கிராமங்ளுக்கு சென்று  அங்கு வசிக்கும் மக்களுக்கு இந்த கலையை கற்றுக் கொடுத்து சகோதர சமத்துவமாகவும் மக்களை ஒருங்கிணைத்து பண்டைய காலத்தில் வள்ளிக்கும்மியை நம் முன்னோர்கள் சிறப்பான முறையில் செய்தார்களோ அதற்கு ஒரு படி மேலே இன்றைய தலைமுறையினரும் இந்த பாரம்பரிய கலையை கற்க வைத்து வழிநடத்தி வருகிறோம் வள்ளிக்குமியை பொறுத்தவரை இளைஞர்கள் இளம் பெண்கள் குழந்தைகள் குடும்பத் தலைவிகள்  கலந்து கொள்வதாகவும் இன்றைய சூழலில் உலகில் உடற்பயிற்சி செய்யும் இந்திய பெண்கள் மிகவும் குறைவு வள்ளி கும்மி மூளை சமன்பாட்டை சரி செய்யும் வகையில் முன்னோர்கள் வழி வகுத்து கொடுத்தார்கள்.

இக்கலையை ஆர்வமாக பெண்கள் கற்று வருகின்றனர் என தெரிவித்தனர்.. மேலும் கிராம மக்கள் கூறுகையில் இந்த நிகழ்வு பெண்களுக்கு வரப்பிரசாதம் 30 நாட்களுக்கு மேலாக பயிற்சி பெற்று பெண்களுக்கு எடை பருமன் குறைந்து ஆரோக்கிய மாக உள்ளனர் இது உன்னதமான உடற்பயிற்சி காண கிடைக்காத அரிய அரங்கேற்றம் இதன் மூலம் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது நலிவடைந்து போன இந்த கலையை மீட்டெடுக்கும் வரலாறு  காணாத வகையில் உள்ளதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News