வழுவூர் பாலமுருகன் ஆலய அலகு தேர் பவனி
மயிலாடுதுறை அருகே வழுவூர் பாலமுருகன் ஆலயத்தில் பக்தர்கள் முதுகில் அலகு குத்தி தேரினை இழுத்துச் சென்று நூதன வழிபாடு செய்தனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-04-23 15:19 GMT
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வழுவூர் வலையாம்பட்டினத்தில் பாலமுருகன் ஆலயம் உள்ளது. இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு 40-ஆம் ஆண்டு பால்குட திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயில் முன்பு இருந்து அலகு காவடி, பால்குடங்கள் புறப்பட்டு கோயிலை வந்தடைந்தன. விழாவில் ஏராளமான பக்தர்கள் தங்கள் முதுகில் அலகு குத்தி பெரிய தேரை இழுத்தும், டாடா ஏசி வாகனத்தில் முருகன் உற்சவமூர்த்திகளைவைத்து கயிறு கட்டி முதுகில் அலகுகுத்தி அலகு காவடியுடன் கோயிலை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
மேலும் பல பக்தர்கள் கல் உருளையை முதுகில் கட்டி இழுத்துக் கொண்டும் சென்றனர். மங்கள வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற இவ்விழாவில் நிறைவாக பாலபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.