கட்டுபாட்டை இழந்த வேன் - விபத்தில் 2 பேர் பலி, 15 பேர் படுகாயம்.

அரவக்குறிச்சி அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து எச்சரிக்கை பலகையில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 15 பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-05-15 06:52 GMT

 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சிரப்பள்ளி அருகே ஆத்தூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி மகன் விஜயகுமார் வயது 47. இவர் தனது உறவினர்கள் 17 பேருடன் மேக்ஸ் கேப் வேனில் , மே 13ஆம் தேதி இரவு ஒரு மணி அளவில் மதுரை- சேலம் சாலையில் சென்று கொண்டு இருந்தனர். இவர்களது வாகனம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்கா தடா கோவில் பிரிவு அருகே வந்தபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பதாகை மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் விஜயகுமாரின் தந்தை துரைசாமி வயது 75 என்பவரும், சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி ஷாலினி வயது 33 என்பவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். மேலும் உடன் வந்த 15 பேரும், வேன் ஓட்டுநர் உள்பட 16 பேர் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர்களை மீட்டு கரூரில் உள்ள அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

உயிரிழந்த இருவரது உடல்களையும் உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வேனை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி, மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்த செந்தில்குமார் வயது 50 என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags:    

Similar News