மாநகராட்சியாக தரம் உயர்த்த பல்வேறு அமைப்பினர்கள் எதிர்ப்பு
கரைக்குடியை மாநகராட்சியாக தரம் உயர்த்த பல்வேறு அமைப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியுடன் அருகே உள்ள கோட்டையூர், கண்டனூர் ஆகிய இரண்டு பேரூராட்சிகள் சங்கராபுரம், அரியக்குடி, இலுப்பக்குடி, கோவிலூர், மானகிரி ஆகிய ஐந்து ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக அறிவிக்க நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டது.
தொடர்ந்து மாநகராட்சியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தினால் செலவினங்கள் உயரும் விவசாய நிலங்கள் மனை இடங்களாக மாறும், பெரிய அளவில் தொழிற்சாலைகள் இல்லாததால் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாக உள்ள நிலையில் வீட்டு வாடகை உயர்வு அதிகரிக்கும் எனக் கூறி சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நவம்பர் 25ஆம் தேதி மாநகராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் சமூக ஆர்வலர்கள் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது நகராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்ற நிலையில் போலீசார் அனுமதிக்காததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்