பல்வேறு கட்சியினர் இயக்கத்தினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மயிலாடுதுறையில் டாக்டர் அம்பேத்கர் 133வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர், இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Update: 2024-04-14 07:06 GMT
டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு அரசு வழக்கறிஞர் ராமசேயோன் திமுக ஒன்றிய கழக செயலாளர்கள் முருகு மணி இமய நாதன் இளையபெருமாள், திராவிடர் கழக மாவட்ட தலைவர் தளபதிராஜ்,திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் மகேஷ் மற்றும் பொறுப்பாளர்கள்  மாலை அணிவித்து மரியாதை செய்தனர். முன்னதாக விடுதலை சிறுத்தை கட்சியினர் மாவட்ட செயலாளர் மோகன் குமார் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைசெய்தனர்.
Tags:    

Similar News