வாசன் பேட்டி
நீட் தேர்வு அரசியல் மூலம் தரமான கல்விக்கு தி.மு.க., ஆபத்தை ஏற்படுத்துகிறது என ஜி.கே. வாசன் பேட்டியளித்தார்.
நீட் தேர்வு அரசியல் மூலம் தரமான கல்விக்கு தி.மு.க., ஆபத்தை ஏற்படுத்துகிறது: வாசன் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று த.மா. கா. தலைவர் வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு குறுவை தொகுப்பு. திட்டத்தை அறிவித்துள்ளது. டிராக்டர், நடவு இயந்திரம் ஆகியவற்றை அரசு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. குறுவை தொகுப்பு திட்டம் என்ற பெயரில் இவற்றையும் அரசு சேர்த்துள்ளது.
ஆனால், குறுவை தொகுப்பு திட்டத்தில் அடிப்படையில் விவசாயிகளுக்கு முதலில் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். விதை, உரம், பூச்சிக்கொல்லி ஆகியவை அடங்கிய சிறப்பு தொகுப்பு அறிவிக்க வேண்டும். மும்முனை மின்சாரத்தை முறையாக வழங்க வேண்டும். தி.மு.க. காவிரி தண்ணீரை பெறுவதில் மெத்தன போக்கை கடைபிடிக்கிறதா? என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் உள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு விவசாயிகளின் எண்ணங்களை பிரதிபலிக்க வேண்டியது அரசின் கடமை. சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டியது கர்நாடக அரசு. தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி என்ற அரசியலுக்கு அப்பாற்பட்டு இதனை அணுக வேண்டும்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அழிக்க வேண்டும் என தி.மு.க., கூறி வருகிறது. கல்வித்துறையில் அரசியல் கூடாது. ஏற்கனவே அரசியலுக்காக வாக்கு வங்கிக்காக மாணவர்கள் பெற்றோர்களை குழப்பிக் கொண்டு இருப்பது ஒரு போதும் ஏற்புடையதல்ல. இந்திய அளவில் தமிழக மாணவர்கள் 2-ம் இடம் பெறக்கூடிய நிலையை ஏற்படுத்துள்ளது. அரசியல் நோக்கத்தோடு நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க., அரசு கூறுவது மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் கூட்டணி கட்சிகளை துாண்டி விடுவது என்பது தரமான கல்விக்கு தி.மு.க. ஆபத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தின் சட்ட ஒழுங்கு நிலை கவலைக்கிடமாக உள்ளது. போதைப்பொருட்களை கட்டுப்படுத்த முடியாத அரசாக இந்த அரசு செயல்படுவது வருத்தம் அளிக்கிறது. போதை பொருட்கள் பயன்பாடு குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
செய்தியாளர்கள் சந்திப்பில் த.மா.கா மாநில செயற்குழு உறுப்பினர் G.சந்திரசேகர மூப்பனார் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் U.சாதிக்அலி, குடந்தை மாநகர தலைவர் .P.S.சங்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்