விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக நிர்வாகிகள் ஆலோசனை
சுரண்டையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.
Update: 2024-03-18 06:47 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டையில் தென்காசி கிழக்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மாவட்ட செயலாளர் வசந்தகுமார், மாவட்ட அமைப்பாளர் பாக்கியராஜ், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வர்கீஸ் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்