தென்காசியில் விசிக கட்சியின் மாநாடு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம்

தென்காசியில் விசிக கட்சியின் மாநாடு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது

Update: 2024-03-02 02:28 GMT

தென்காசியில் விசிக கட்சியின் மாநாடு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது


தென்காசி மாவட்டம் தென்காசி பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் ஜனநாயக மாநாட்டின் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் தென்காசி விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் பண்பொழி செல்வம் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வன்னிஅரசு, மாநில அமைப்பு செயலாளர் எல்லாளன், மாநில துணை செயலாளர் சலீம் ஆகியோர் சிறப்புரையாற்றி பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் லிங்கவல்லவன் மற்றும் மண்டலச் செயலாளர் குழந்தை வள்ளுவன் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News