திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-04 12:24 GMT
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க கோரியும் 21,000 கோடி ரூபாய் நிவாரண தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க கோரியும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை அகற்றி மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த கோரியும் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பியும் கண்டன பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில,மாவட்ட,ஒன்றிய,பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.