தேர்தலை முன்னிட்டு வாகன விழிப்புணர்வுப் பேரணி
அரியலூரில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாகன விழிப்புணர்வு நடைபெற்றது.;
அரியலூரில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாகன விழிப்புணர்வு நடைபெற்றது.
அரியலூர், மார்ச் 25- மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அரியலூர் நகரப் பகுதிகளில், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் திங்கள்கிழமை தேர்தல் விழிப்புணவு ஏற்படுத்தப்பட்டது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா, பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.முன்னதாக அவர், தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பது அவசியம் குறித்த ஸ்டிக்கரை மேற்கண்ட வாகனங்களில் ஓட்டினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)பரிமளம், தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் ராமலிங்கம், வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரன், வாகன ஆய்வாளர் சரவணபவ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.