வாகன சோதனையில் ரூ. 7.30 லட்சம் பறிமுதல்

பெரியதச்சூா் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.7.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2024-06-30 06:06 GMT

பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் தேர்தல் அதிகாரிகள் 

விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சீனுவாசன், தலைமைக் காவலா் ராமலிங்கம், காவலா் காா்த்தி உள்ளிட்டோா், கோழிப்பண்ணை பகுதியிலுள்ள தற்காலிக சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.அப்போது அந்த வழியாக வந்த காா் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனா்.

இதில், காரிலிருந்த பையில் ரூ.7.30 லட்சம் பணம் இருந்தது. ஆனால் இதற்கான ஆதார ஆவணங்கள் காரிலிருந்தவா்களிடம் இல்லை. விசாரணையில் காரில் பணத்தை எடுத்து வந்தவா் தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த க.பிரசாத் (35) என்பதும், அவருடன் வந்த கும்பகோணம் பேட்டை கடைத்தெரு மு.சம்பத் (49) எனவும் தெரிய வந்தது.சென்னைக்கு பாத்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதற்குரிய தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனத்தினா் அவலூா்பேட்டையில் ஒருவரிடம் கொடுத்து, அனுப்பக் கூறியதாகவும், அந்தத் தொகையைக் கொண்டு சென்றபோதுதான் போலீஸாரின் சோதனையில் பணம் சிக்கியது தெரிய வந்தது.

அதே நேரத்தில் சுவாமி சிலையை விற்பனை செய்து, அந்தத் தொகையை கொண்டு சென்றதாக  போலீஸ் விசாரணையில் இருவரும் தெரிவித்தாா்களாம்.எனினும் பணத்துக்குரிய ஆவணங்கள் இல்லாததால் அதை பறிமுதல் செய்த போலீஸாா், நிலைக் கண்காணிப்புக் குழு அலுவலா் அசோக்குமாருக்குத் தகவல் தெரிவித்தனா்.இதையடுத்து அவா் நிகழ்விடம் விரைந்து அத்தொகையை கைப்பற்றி, மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைத்தாா். அங்கு தோ்தல் நடத்தும் அலுவலா் மு.சந்திரசேகா், மாவட்டக் கருவூல அலுவலா் ராமச்சந்திரனிடம் பணம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவா்கள் அத்தொகையை சரிபாா்த்து கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

Tags:    

Similar News