கிரிவலப்பாதையில் வாகனங்கள் நுழைய தடை!
பழனி அடிவாரத்தில் கிரிவலப்பாதையில் வாகனங்கள் நுழைய தடை விதித்தும், மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில் கிரிவல பாதையில் உள்ள கடைகளின் பொருட்கள் அபகரிக்கப்பட்டுள்ளன.;
By : King 24x7 Angel
Update: 2024-03-07 11:10 GMT
ஆக்கிரமிப்பு கடைகள்
பழனி அடிவாரத்தில் கிரிவலப்பாதையில் வாகனங்கள் நுழைய தடை விதித்தும் மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில் கிரிவல பாதையில் உள்ள கடைகளின் பொருட்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. கோயில் நிர்வாகத்தின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கிரிவலப்பாதையில் கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு தங்கள் வாகனங்களை எடுத்துச்செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.