வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மேல்நிலைப்பள்ளியின் முப்பெரும் விழா | கிங் நியூஸ் 24x7
கொங்குநாடு
மாணவர்களின் கலைத்திறன், பன்நோக்குச்சிந்தனை, சமூகஉணர்வு ஆகியவற்றை வாக்குவிக்கும் வகையிலும், ஆளுமைத்திறன் தொழில் முனைவு இலக்கு நோக்கிய செயல்பாடு இவற்றை உணர்த்தவும், ஆசிரியர்கள் பணிப்பற்றுடனும் மாணவர்களின் வளர்ச்சியில் அக்கறையுடனும் செயலாற்றவும் இவ்விழாக்கள் நிகழ்த்தப்பட்டது.
இவ்விழாவில் வகுப்புவாரியான ஆண்டுவிழாக்கள் நடத்தப்பெற்று அனைத்து மாணவர்களும் கலைநிகழ்ச்சிகளில் பங்காற்றிட வழிவகை செய்யப்பட்டது. தொடர்ந்து ஆளுமை மேம்பாட்டிற்காக சக்தி அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தேவியாக்குறிச்சி கல்வி நிறுவனங்களின் செயலாளர் மற்றும் தாளாளர் திரு. A.K.ராமசாமி அவர்கள் கலந்து கொண்டு "மாணவர்களின் இலக்கு நோக்கிய பயணம்" என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அனுபவத்திற்கு ஏற்றார் போல் வெள்ளி நாணயங்களை நிறுவனங்களின் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து நிருவாகக் குழு எடுத்துச் சிறப்பித்தனர். ஆசிரியர்களுக்குப் பணி வழங்கிச் சிறப்பித்தனர். உறுப்பினர்களுக்கு விழா
இந்நிகழ்ச்சியில் கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு.ராஜா, தாளாளர் முனைவர். திரு.ராஜன், பள்ளியின் ஆலோசகர் முனைவர். திரு.ராஜேந்திரன், செயலாளர். திரு.சிங்காரவேலு, பொருளாளர் திரு.ராஜராஜன், பதின்ம பள்ளி முதல்வர் திருமதி. S.S.சாரதா மத்திய பள்ளியின் மூத்த முதல்வர் திருமதி. P.யசோதா, முதல்வர் திருமதி. P.காயத்ரி, கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி. M.சாந்தி மற்றும் ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்