பாஜகவுக்கு வந்த விஜயதாரணியை மனதார பாராட்டுகிறேன் - புதிய நீதி கட்சி தலைவர் சண்முகம்

”பிரதமர் மோடி வரும் 27,28ம் தேதிகளில் தமிழகத்திற்கு வருகை தருகிறார்”

Update: 2024-02-25 18:46 GMT
புதிய நீதி கட்சி தலைவர் சண்முகம்

வேலூர் மாவட்டம் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கே வி குப்பம் தாலுகா சென்னாங்குப்பத்தில் விஜயலட்சுமி மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஏசியஸ் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இதில் வேலூர் ஓசூர் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து முன்னணி நிறுவனங்கள் 16க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றனர். முகாமில்  மொத்தமாக 756 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்/  புதிய நீதி கட்சி நிறுவனர் ஏசி சண்முகம் 502 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில், ”காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பிஜேபியில் இணைந்தது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்பொழுது இவர் இணைந்துள்ளார் .என்று சொன்னால் காங்கிரஸ் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

அதேபோல விஜயதாரணி வந்திருப்பதை மனதார நான் பாராட்டுகிறேன் . ஒரு பதவியில் இருந்து ஒரு இயக்கத்திலே மாறும்பொழுது எவ்வளவு சிரமம் இருக்கும் என்பதை நான் அறிவேன். என்னுடைய வாழ்த்துக்களையும் மற்றும் காங்கிரஸ் பேர் இயக்கம் இந்தியாவிலேயே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு . இந்தியா கூட்டணியை உருவாக்கிய காங்கிரஸ் பெயர் இயக்கம் இந்தியா கூட்டணிக்கு பொறுப்பாளராக வந்த பீகார் மாநிலத்தினுடைய முதல்வர் அவர்களே பாரதிய ஜனதாவுடன் இணைந்து அவர்கள் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் .

இந்தியா கூட்டணியில் வேட்பாளர்கள் இல்லை மேற்கு வங்காளத்தில் அவர்கள் தனித்துப் போட்டி என கூறியுள்ளார் . மோடி அவர்களுக்கு இணையான தலைவர்கள் எதிர்க்கட்சியிலே இல்லை. பாரதப் பிரதமர் வருகிற 27,28 தேதியில் தமிழகத்திற்கு வருகை தர உள்ளார் .இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் அரசியல் மாற்றங்கள் நிச்சயமாக நடக்கும்” என்று கூறினார்.

Tags:    

Similar News