வேங்கடேஸ்வர பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

காவேரிப்பாக்கம் அருகே உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வேங்கடேஸ்வர பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-05-27 11:55 GMT

கும்பாபிஷேகம் 

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியம் பன்னீயூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சங்காடு கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வேங்கடேஸ்வர பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு பகவத் பிராா்த்தனை, ஆசார்யவர்ணம், யாகசாலை, புண்யாகவாஜனம், அங்குராா்ப்பணம், வாஸ்துஹோமம், அக்னிபிரதிஷ்ட்டை, கும்பபிரதிஷ்ட்டை, மகாபூர்ணாஹூதி மற்றும் முதல் கால பூஜை நடைபெற்றது.

தொடா்ந்து, விஸ்வருபம், கோபூஜை, புண்யாகவாஜனம், அக்னிஆராதனம், கும்ப ஆராதனம், மஹா தீபாரதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து ஸ்ரீதேவி பூமிதேவி சமேத வேங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதையடுத்து பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. திருப்பாற்கடல் பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவில் அர்ச்சகர் சந்தானம் பட்டாச்சாரியார் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேக பணிகளை செய்தனர்.

Tags:    

Similar News