வேப்பனப்பள்ளி : கத்தரிக்காய் விளைச்சல் அமோகம்

வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கத்தரிக்காய் விளைச்சல் அதிகரித்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-06-30 01:43 GMT

அறுவடை செய்யப்பட்ட கத்தரிக்காய்

 கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார் கிராம பகுதிகளில் ஆண்டு தோறும் கத்தரிக்காய் விளைச்சல் அமோகமாக செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் இருந்து கத்திரிக்காய் சாகுபடி செய்யப்பட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கடும் வெயில் தாக்கத்தால் கத்திரிக்காய் விலை கடுமையாக பாதிப்படைந்தது.

இந்த நிலையில் தற்போது ஒரு மாதமாக வெயில் தாக்கம் குறைந்துள்ளதால் கத்திரிக்காய் விதத்தில் விவசாயிகள் ஆர்வமுத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய பகுதியில் கத்திரிக்காய் அறுவடை செய்யப்பட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஒரு கிலோ கத்திரிக்காய் 30 ரூபாய் முதல் 60 ரூபாய் விற்கப்பட்ட வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் ஏற்றுமதியும் தீவிரமடைந்துள்ளது.

Tags:    

Similar News