கால்நடை மருத்துவ முகாம்

வயலூர் ஊராட்சியில் நடந்த மருத்துவ முகாமில் 250 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன.

Update: 2024-02-27 05:26 GMT

வயலூர் ஊராட்சியில் நடந்த மருத்துவ முகாமில் 250 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன. 

  திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த வயலூர் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் கால்நடை பராமரிப்புத் துறையின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா திருமால் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுமதி வெங்கடேசன் முன்னிலை வகித்தார். கால்நடை மருத்துவர்ராஜ்குமார்வரவேற்றார். முகாமில்கால்நடை மருத்துவர் ராஜ்குமார் தலைமையில் செயற்கை முறை கருவூட்டாளர்கள் சிவானந்தம், ஏழுமலை ஆகியோர் 250 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி, செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம்,சுண்டுவாத அறுவை சிகிச்சை, மலடு நீக்க சிகிச்சை, உள்ளிட்ட பல்வேறுசிகிச்சைகளைமேற்கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன், கால்நடை உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட தொழிற்சார் வல்லுநர் ராதிகா நன்றி கூறினார்.

Tags:    

Similar News