பேருந்தில் இருந்து முதியவரை நடத்துனர் வெளியே தள்ளும் வீடியோ வைரல்
திருப்பூரில் அரசு பேருந்தில் இருந்து முதியவரை நடத்துனர் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.;
முதிய்வரை தள்ளிய நடத்துனர்
திருப்பூர் பிச்சம்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து கோபி செல்லும் பேருந்தில் வயதான முதியவர் ஒருவர் சாக்குப்பையுடன் பஸ்ஸில் ஏறியுள்ளார் அப்போது அந்த பஸ் ஓட்டுனர் மற்றும் கண்டக்டர் இருவரும் அவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டது
உடன் அந்த முதியவரை கண்டக்டர் பிளாஸ்டிக் பைப் கொண்டு அடிக்க முற்படுவதும் பின்னர் அவரை கீழே தள்ளிவிட்டதில் முதியவர் மயங்கி பஸ் நிலையத்தில் விழுந்து கிடக்கும் சம்பவத்தை பிச்சம்பாளையம் பஸ் நிலையத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்த பயணி ஒருவர் தற்செயலாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அது வேகமாக பரவி வைரலாகி வருகிறது பொறுப்பான அரசு ஊழியர்கள் பொறுப்பற்ற முறையில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது