வித்யார்த்தி ராஜாசுவாமி நூற்றாண்டு விழா

வித்யார்த்தி ராஜாசுவாமி நூற்றாண்டு விழாவிற்கு தோப்பு அன்பு வனத்தில்  இருந்து கேரளாவுக்கு தீபம் புறப்பட்டது.

Update: 2024-04-30 06:14 GMT

வித்யார்த்தி ராஜாசுவாமி நூற்றாண்டு விழாவிற்கு தோப்பு அன்பு வனத்தில்  இருந்து கேரளாவுக்கு தீபம் புறப்பட்டது.


கேரளா மறுமலர்ச்சியின் நாயகராக கருதப்படும் வித்யார்த்தி ராஜா வின் நூறாவது ஆண்டு விழா மே மாதம் 8ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது .விழாவை ஒட்டி தீபம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டம்  சுவாமிதோப்பு அன்புவனத்தில் நடந்தது. விழாவுக்கு அய்யா வழி சமய தலைவர் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார். பேராசிரியர் ஆர். தர்ம ரஜினி முன்னிலை வகித்தார்.  ஐயா வைகுண்ட சுவாமியின் கண்ணாடி வழிபாடு சமபந்தி போஜனம் சமத்துவ சமாஜம் ஆகிய செயல்பாடுகளை கேரளா முழுக்க கொண்டு சென்ற சட்டம்பிசாமி என்னும் வித்யார்த்தி ராஜா நூற்றாண்டு விழாவை ஒட்டி சுவாமி தோப்பு அன்பு வனத்திலிருந்து தீபம் கொண்டு செல்லப்பட்டது .  தீபத்தை பால பிரஜாபதி அடிகளார் கேரள மாநிலம் வித்யார்த்தி மட தலைமை குரு சுவாமி  கிருஷ்ணாநந்தா அவர்களிடம் வழங்கினார். .தொடர்ந்து எட்டாம் தேதி நடைபெறும் விழாவில் பால.பிரஜாபதி அடிகளார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கின்றார். நிகழ்ச்சியில் கேரள மாநிலத்தில் இருந்து சட்டம்பி எனும் வித்யார்த்தி ராஜா பக்தர்கள் தொண்டர்கள் கலந்து சிறப்பித்தனர்.
Tags:    

Similar News