விஜய் ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
நடிகர் விஜய் தனது கட்சி பெயரை தமிழக வெற்றி கழகம் என அறிவித்துள்ளார். அதனை கொண்டாடும் விதமாக ராமேஸ்வரம் நகராட்சி அருகே விஜய் மக்கள் இயக்கத்தினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.;
Update: 2024-02-05 02:05 GMT
இனிப்பு வழங்கல்
ராமநாதபுரம் ராமேஸ்வரம் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக குறிப்பாக தமிழக வெற்றிக்கழகம் என்று அறிவித்துள்ளார் இது அவரது மக்கள் இயக்க தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்க தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் இணைந்து ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.