உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கிய விஜய் ரசிகர்கள்
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது;
Update: 2024-05-29 08:51 GMT
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது
மே 28 உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு காரைக்குடி உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வ.உ.சி சாலையில் உள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் சார்பில் அப்பகுதி பொதுமக்கள் 100 பேருக்கு சிக்கன் பிரியாணி, முட்டை, ஐஸ் கிரீம், குடிநீர் பாட்டில், ஆகியவற்றை காரைக்குடி பிரபு டென்டல் மருத்துவமனையில் டாக்டர் பிரபு வழங்கினார். இதில் தமிழக வெற்றிக்கழக சிவகங்கை மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.