விஜயதசமியை முன்னிட்டு ஏடு படிக்கும் நிகழ்ச்சி
விஜயதசமியை முன்னிட்டு திருவந்திபுரம் ஹயக்ரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
Update: 2023-10-24 07:50 GMT
ஏடு படிக்கும் நிகழ்ச்சி
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் எதிரே பிரசித்தி பெற்ற ஹயக்ரீவர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி ஹயக்ரீவருக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு, கருப்பு பலகை, பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை கொண்டு வந்து ஹயக்ரீவர் சன்னதியில் வைத்து வழிபட்டனர்.