விகாஸ் பப்ளிக் பள்ளியில் மாணவர்கள் பிரிவு உபசார விழா
விகாஸ் பப்ளிக் பள்ளியில் மாணவர்கள் பிரிவு உபசார விழா நடைபெற்றது.;
Update: 2024-02-19 12:01 GMT
பிரிவு உபசார விழா
நாமக்கல் விகாஸ் பப்ளிக் பள்ளியில் +2 வகுப்பு மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் பிரிவு உபசார விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி முதன்மை நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினார். மேலும் மாணவர்கள் மிக பெரிய சாதனைகளை படைத்து வெற்றி பெற வாழ்த்தினார். பள்ளியின் நிர்வாக அலுவலர் வினோத் குமார் முன்னிலை வகித்தார். மாணவர்கள் பள்ளியில் தங்களின் இனிய அனுபவங்களை சிறப்பாக வெளிப்படுத்தினர். பள்ளியின் முதல்வர் கணேஷ் மாணவர்களை வாழ்த்தி பேசினார். மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட ஊக்கத்திற்கு நன்றி தெரிவித்தனர்.