விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு

வட்டார வளர்ச்சி அலுவலர் விக்கிரவாண்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி மற்றும் அலுவலக பணியாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Update: 2024-02-10 05:57 GMT

விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) பணிபுரிந்து வந்த முபாரக் அலி பேக், விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கண்காணிப்பாளராக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) குலோத்துங்கன் விக்கிரவாண்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி மற்றும் அலுவலக பணியாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Tags:    

Similar News