லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

பரமக்குடியில் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு விவசாய கூலித்தொழிலாளியிடம் ரூ.2000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-04-05 04:06 GMT

கைது 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா காந்தி நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் 48. இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.இவர் வாரிசு சான்றிதழ் வேண்டி இ- சேவை மையம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்தார் .இது தொடர்பாக அவர் எமனேசுவரம் குருப் கிராம நிர்வாக அலுவலர் பூமிநாதன் அவர்களை சந்தித்து தன்னுடைய மனு சம்பந்தமாக கேட்ட போது மேல் அதிகாரிக்கு பரிந்துரை செய்ய தனக்கு லஞ்சமாக ரூ.2000 /- கொடுத்தால் தான் பரிந்துரை செய்வேன் என்று கட்டாயப்படுத்தியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்திரசேகர் இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலிஸ்ஸில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு துறை போலிஸார்  அறிவுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.2000/- லஞ்சமாக வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக பிடிபட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News