திமுக நிர்வாகி மீது கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் புகார்
கிராம நிர்வாக அலுவலரை தகாத வார்த்தையில் பேசி மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பர்கூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா ஜெகதேவி கிராம நிர்வாக அலுவலராக பொறுப்பு வகித்து வருபவர் முனீர். இந்நிலையில் நேற்று மாலை பர்கூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக உதவியாளர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வட்டாட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. அப்பொழுது திமுகவில் கலை இலக்கிய அமைப்பாளராக பொறுப்ளரான பாலாஜி என்பவர் அவரது உறவினர் ஒருவருக்கு இறப்பு நிதி பெற மனுவில் கிராம நிர்வாக அலுவலரை கையொப்பம் இட சொல்லி கூட்டத்தில் இருந்து வெளியே வர சொல்லி கூச்சல் போட்டு அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு வருவதாக அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கூறிய நிலையில் திமுக நிர்வாகி பாலாஜி கிராம நிர்வாக அலுவலர் முனீரை தகாத வார்த்தைகளால் பேசியும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பர்கூர் காவல் ஆய்வாளர் சவிதா விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் கூறுகையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனு குறித்து பதிவேடுகள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருவாய் ஆய்வாளரிடமோ அல்லது கிராம நிர்வாக அலுவலரிடம் தான் ஒப்படைக்கப்பட்டு பின்னர் விசாரணை பேரில் மனு பரிந்துரைக்கப்படும். இந்தநிலையில் நேரடியாக திமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரது கையில் அந்த மனு எவ்வாறு சென்றது எனவும் மேலும் கிராம நிர்வாக அலுவலர்களை நேரடியாக வந்து மிரட்டல் விடுத்து கையொப்பமிட சொல்வது மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாகவும் கிராம நிர்வாக அலுவலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழக முதல்வர் கட்சியை காரணம் காட்டி எவ்வித குற்ற செயலிலும் விதிகளை மீறியும் செயல்படக்கூடாது என கட்சியினருக்கு பல்வேறு முறை அறிவுறுத்தல்களை அளித்த நிலையில் திமுக நிர்வாகி கிராம நிர்வாக அலுவலர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நுழைந்து மிரட்டிய சம்பவம் பர்கூர் பகுதியில் பரப்பரப்பை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.