ஆவடி அருகே ஆர்டிஓ வாகனத்தை மறித்து கிராம மக்கள் வாக்குவாதம்

ஆவடி அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை விசாரிக்க வந்த ஆர்டிஓ வை மரித்து கிராம மக்கள் வாக்குவாததில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-06 16:03 GMT

வாக்கு வாதத்தில் ஈடுபட்ட மக்கள்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே வெள்ளானுர் ஊராட்சி காட்டூரில் அரசுக்கு சொந்தமான 40 சென்ட் நிலம் உள்ளது அதை சிலர் ஆக்கிரமிப்பு செய்வதாக ஆர்டிஓ விற்கு புகார் கொடுத்துள்ளனர் .

நேரடி விசாரணைக்கு வந்த ஆர்டிஓ கற்பகம் முறையாக விசாரணை நடத்தாமல் காலி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை திட்டியதாக தெரிகிறது இதனால் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆர்டிஓ வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் மக்களிடம் சமாதானம் பேசி பின்னர் ஆர்டிஓ வாகனத்தை விட்டனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News