முறைகேடாக வீட்டு மனைப்பட்டா - கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்

பிரதிவிமங்கலம் கிராமத்தில் முறைகேடாக வீட்டு மனைப் பட்டா வழங்குவதாக கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.

Update: 2024-03-12 07:05 GMT

கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்

பிரதிவிமங்கலம் கிராமத்தில் முறைகேடாக வீட்டு மனைப் பட்டா வழங்குவதாக கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர். இது தொடர்பாக தியாகதுருகம் அடுத்த பிரதிவிமங்கலம் காலனி மக்கள் கலெக்டர் ஷ்ரவன்குமாரிடம் அளித்த மனு: கள்ளக்குறிச்சி அடுத்த பிரதிமங்கலம் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்காக கிராம எல்லையில் 137 பேருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில் பலருக்கு முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. ஒரே வீட்டில் நெருக்கடியாக வாழும் குடும்பத்தினர் உள்ள நிலையில் அவர்களுக்கு பட்டா வழங்கவில்லை. தற்போது ஒரு சில குறிப்பிட்ட குடும்பத்திற்கு வீட்டு மனைப்பட்டா வழங்குகின்றனர். முறையாக வீட்டு மனைப்பட்டா வழங்குமாறு கூறினால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். வீட்டு மனைப் பட்டா வழங்குவதில் முறைகேடு நடப்பதாக பல ஆண்டுகளாக புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, துறை உயர் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து வீடு இல்லாதவர்களுக்கும், நெருக்கடியாக வாழும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News