மாற்றுப்பாதை அமைத்துத்தர கிராம மக்கள் கோரிக்கை !!
பாலப்பணிகள் தாமதம் ஆவதால் மாற்றுப்பாதை அமைத்துத்தர கிராம மக்கள் கிராம மக்கள், கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.
By : King 24x7 Angel
Update: 2024-05-11 12:23 GMT
இளையான்குடி அருகே சாலைக்கிராமத்திலிருந்து கிளாஞ்சுனை செல்லும் 9 கி.மீ நீளமுள்ள ரோட்டில் உள்ள 2 பழைய பாலங்களை இடித்துவிட்டு புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
பாலம் கட்டும் இடங்களுக்கு அருகில் வாகனங்கள் செல்லும் வகையில் மாற்றுப்பாதை அமைக்காமல் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள வடக்கு சாலைக்கிராமம், அய்யம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அந்த வழியாக செல்ல முடியவில்லை.
நீண்ட துாரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளதால் காலதாமதமும், எரிபொருள் செலவும் கூடுதல் செலவாகுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் பாலங்கள் அமைக்கும் இடத்திற்கு அருகில் மாற்றுபாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்