சாலை வசதியின்றி 10 ஆண்டுகளாக தவித்து வரும் கிராம மக்கள்

காரைக்குடி அருகே 10 ஆண்டுகளாக சாலை வசதியின்றி கிராம மக்கள் தவித்து வருகின்றனர்;

Update: 2024-05-27 12:10 GMT

காரைக்குடி அருகே 10 ஆண்டுகளாக சாலை வசதியின்றி கிராம மக்கள் தவித்து வருகின்றனர்


காரைக்குடி அருகே உள்ள மானகிரியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி செய்யப்படாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட தலக்காவூர் ஊராட்சி சுண்ணாம்புகாரத் தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. காரைக்குடி நகரை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதி வளர்ந்து வரும் முக்கிய பகுதியாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் சாலை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement

ஆனால் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. இதனால் மழை காலங்களில் இப்பகுதி சகதி நிறைந்து காட்சியளிக்கிறது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்: கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தரவில்லை. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி பாம்புகள் வீட்டிற்குள் வந்து விடுகிறது. வாகனங்கள் செல்ல முடிவதில்லை. வயதானவர்கள் வழுக்கி விழுகின்றனர். பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. புதிய சாலை வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News