அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் மனு
அடிப்படை வசதிகள் கேட்டு விழுப்புரம் ஆட்சியரகத்தில் திருவக்கரை கிராம மக்கள் மனு அளித்தனர்.;
Update: 2024-06-08 04:43 GMT
அடிப்படை வசதிகள் கேட்டு விழுப்புரம் ஆட்சியரகத்தில் திருவக்கரை கிராம மக்கள் மனு அளித்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் தலைமையில் திருவக்கரை கிராம மக்கள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- எங்கள் ஊராட்சியில் தெருமின் விளக்கு வசதி, குடிநீர் வசதி, வடிகால் வாய்க்கால் வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. இதுபற்றி ஊராட்சி தலைவரிடம் சென்று கேட்டபோதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அடிப்படை வசதிகள் இன்றி நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு எங்கள் ஊராட்சியில் போதிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறியிருந்தனர்.