விழுப்புரம் அருகே மாணவியிடம் சில்மிஷம்: அரசு பள்ளி ஆசிரியருக்கு சிறை
விழுப்புரம் அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்த அரசு பள்ளி ஆசிரியருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய மாணவி, கடந்த 2019-ம் ஆண்டில் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 8.3.2019 அன்று பள்ளியில் நடந்த சிறப்பு வகுப் பில் கலந்துகொண்டாள்.
அப்போது அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா சரவணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 37) என் பவர், அந்த மாணவியை தனியாக அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து அந்த மாணவி, தனது பெற்றோரிடம் கூறவே, இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் கள், திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் ஆசிரியர் கிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது.
அதில், வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கிருஷ்ணனுக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு சார்பில் இழப்பீடாக ரூ. 1 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.