விழுப்புரம் : புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்துவ தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் இன்று காலை முதலே சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-29 03:42 GMT

சிலுவைப்பாதையில் சிலுவை ஊர்வலம் 

 புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். சாம்பல் தினம் முதல் 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் நோன்பு அனுசரித்து, இன்று முழு நோன்பு இருந்து சிறப்பு பிரார்தனையி ல் ஈடுபட்டனர். இதனையொட்டி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு நிகழ்வு நடந்தது. அப்போது சிறப்பு திருப்பலி மற்றும் வழிபாடுகள் நடந்தன. ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை சுமந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

புனித வாரத்தின் 2வது நிகழ்வாக, புனித வியாழன் நேற்று அனுசரிக்கப்பட்டது. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முதல் நாள் தமது சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டார். இந்தநிகழ்வை நினைவு கூறும் விதமாக அனைத்து தேவாலயங்களிலும் பாதம் கழுவும் நிழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. அதன் பிறகு இன்று இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளே புனித வெள்ளி அதையொட்டி தேவாலயங்களில் நீண்ட நேரம் திருப்பலி , ஆராதனைகள் நடைபெற்றன.

கிறிஸ்துவர்கள் வெள்ளாடை அணிந்து சிலுவைப்பாதையில் சிலுவையை ஊர்வலமாக சுமந்து சென்றனர். விழுப்புரத்தில் உள்ள டவுன் காவல் நிலையம் அருகே உள்ள டிஈஎல்சி சர்ச், மற்றும் தூய ஜேம்ஸ் ஆலயம் மற்றும் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள தூய சேவியர் ஆலயம், புதுவை சாலையில் உள்ள கிருஸ்து அரசர் ஆலய பங்குதந்தை பிரான்சிஸ் ஜோசப்அகர்வால், உதவி பங்குத்தந்தை பிரேம் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்து 3ம் நாள் உயிர்தெழுவதை ஈஸ்டர் தினமாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.

Tags:    

Similar News