விழுப்புரம் : திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

விழுப்புரத்தில் பழமை வாய்ந்த திரெளபதை அம்மன் கோவிலின் 474ம் ஆண்டு தீமிதி திருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-03-29 03:29 GMT

விழுப்புரம் கீழ்பெரும்பக்கம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தீமிதி உற்சவ திருவிழா விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு 474ம் ஆண்டு தீமிதி உற்சவ திருவிழாவாக கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த உற்சவ திருவிழாவில் நேற்று  தொடங்கியது.

இரண்டாம் நாளான இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கோவில் வாயிலில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் திரௌபதி அம்மனுக்கு அர்ஜுனர் தாலி கட்டும் நிகழ்வு மேளதாளங்கள் முழஙக பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷ்ங்களுக்கிடையே வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் திருமணம் வரம் வேண்டியும், திருமணம் வேண்டுதல் நிறைவேறியவர்கள் நேர்த்திக்கடனாக வேட்டி, சேலை, வளையல், மஞ்சள், குங்குமம் , தாலி ஆகியவைகளை சீர்வரிசையாக கொடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் திரௌபதி அம்மன் மணக்கோலத்தில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Tags:    

Similar News