ஏரி மண் அள்ளுவதில் விதிமீறல்; கொட்டவாக்கம் விவசாயிகள் வேதனை

ஏரி மண் அள்ளுவதில் விதிமீறல் நடப்பதால், கொட்டவாக்கம் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2024-02-21 10:07 GMT

ஏரி மண் அள்ளுவதில் விதிமீறல் நடப்பதால், கொட்டவாக்கம் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் அடுத்த கொட்டவாக்கம் கிராமத்தில், நீர்வள ஆதாரத் துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து, சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை போடும் பணிக்கு, ராட்சத இயந்திரங்களின் மூலமாக சவுடு மண் அள்ளி, டிப்பர் லாரிகளில் எடுத்து செல்கின்றனர். பொதுவாக, ஒரு நீர்வள ஆதாரத்துறை ஏரியில், 1 மீட்டர் ஆழம் வரை எடுக்க வேண்டும் என, வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 1 மீட்டர் ஆழம் வரையில் களி மண்ணை அகற்றிவிட்டு, அதன் பின், 5 - 7 மீட்டர் வரையில் மண்ணை அள்ளி வருகின்றனர்.

இதை கண்காணிக்க வேண்டிய, நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், கை கட்டி வேடிக்கை பார்ப்பதாக விவசாயிகள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, கொட்டவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் கூறுகையில், 'அளவுக்கு அதிகமாக மண்ணை அள்ளுவதால், ஒரே இடத்தில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. அந்த தண்ணீரையும் பாசனத்திற்கு எடுத்து செல்ல முடியாத சூழல் உள்ளது. இதை தவிர்க்க, நீர்வள ஆதாரத் துறையினர் பாசன வசதிக்கும் ஏற்ப வழி வகை செய்ய வேண்டும்' என்றனர்."

Tags:    

Similar News