சிவகாசி அருகே பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள்

சிவகாசி அருகே பட்டாசு ஆலைகளில் விதிமீறல்களை கண்டறிந்து தற்காலிகமாக உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

Update: 2024-05-19 14:10 GMT

சிவகாசி அருகே பட்டாசு ஆலைகளில் விதிமீறல்களை கண்டறிந்து தற்காலிகமாக உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டது.


சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விதிமீறல்கள். தற்காலிமாக உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை... விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மாரனேரி கிராமத்தில் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஆர்டிஓ விஸ்வநாதன் தலைமையில் தனி தாசில்தார் திருப்பதி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது,பட்டாசு ஆலையில் விதி மீறல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து அந்த பட்டாசு ஆலையை தற்காலிகமாக உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.மேலும் வெற்றிலையூரணி கிராமத்தில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது விதி மீறல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அந்த பட்டாசு ஆலையையும் தற்காலிகமாக உரிமத்தை ரத்து செய்ய அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர்.
Tags:    

Similar News