வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என்ற வருவாய்த்துறை

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து வேலைநிறுத்தம்.

Update: 2024-03-05 11:45 GMT
வேலை நிறுத்தம் குறித்த விளக்கம் 

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கடந்த 13ம் தேதி முதல் 9ம் அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த தொடர் போராட்டத்தில் தாசில்தார், துணை தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு உள்ளனர். வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் முதல் கட்ட போராட்டமாக கடந்த பிப் - 13ம் தேதி ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

அடுத்ததாக கடந்த 22ம் தேதி வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் அனைத்து பணிகளையும் புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 27ம் தேதி முதல் மாவட்ட தலைநகரில் தொடர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  தமிழகம் முழுவதும் வருவாய் துறை அலுவலர் சங்கங்கள் அனைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வந்த நிலையில், அதை தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப் 2 நேரடி நியமன அலுவலர் சங்கத்தினர் மறுத்து தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள்,  மக்களின் நலன் கருதி போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும், தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அந்த சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராஜாராம் பாண்டியன் தெரிவித்தார். 

Tags:    

Similar News