அரியலூரில் விசிக ஆர்ப்பாட்டம்- மாநில அமைப்பு செயலாளர் பங்கேற்பு
அரியலூரில் விசிக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-23 14:59 GMT
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அரியலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், வாக்குபதிவு இயந்திரம் உடன் நூறு சதவீத ஒப்புகை சீட்டு இயந்திரத்தையும் இணைத்து தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி விசிக சார்பில் இன்று நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலின்போது நூறு சதவீத ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும் எனவும், தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தபட்டது.
இதில் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.