ஆதரவற்ற உடலை நல்லடக்கம் செய்த தன்னார்வலர்கள்
அரசு மருத்துவக் கல்லூரி அருகே மை தருமபுரி அமரர் சேவை மூலம் ஆதரவற்ற உடலை நல்லடக்கம் செய்தனர்.;
Update: 2024-06-13 03:29 GMT
அரசு மருத்துவக் கல்லூரி அருகே மை தருமபுரி அமரர் சேவை மூலம் ஆதரவற்ற உடலை நல்லடக்கம் செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொம்மிடி ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிப்பட்டு 40 வயது மதிக்கத்தக்க பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து பெண்ணின் பிரேதத்தை மீட்டு விசாரணை செய்ததில் உறவினர்கள் யாரும் இல்லாத ஆதரவற்றவராக இருந்தார். இதனை அடுத்து இன்று ஜூன் 13 மாலை சேலம் இருப்புப்பாதை காவலர் அருள்குமார், மை தருமபுரி அமரர் சேவை சார்பாக முஹம்மத் ஜாபர், அருண் பிரசாத், தென்றல் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.