திருப்பூரில் வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து மேயர் வாக்கு சேகரிப்பு.
திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளர் சுப்புராயனை ஆதரித்து 49 வது வார்டு பகுதியில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் வாக்கு சேகரித்தார்.
Update: 2024-04-12 09:24 GMT
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், இந்தியா கூட்டணியின் வேட்பாளர் தோழர் சுப்பராயனை ஆதரித்து 49 வார்டுக்கு உட்பட்ட ஆர்விஇ நகர்,வள்ளியம்மை நகர் ஆகிய பகுதிகளில், வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் மற்றும் இந்தியா கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.இந்நிகழ்ச்சியில் வட்ட கழக செயலாளர் மனோகரன் , நல்லூர் பகுதி கழக அவைத் தலைவர் சுப்பிரமணியம், 49 வது வட்ட கழக நிர்வாகிகளும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.